Tamil Cinema News | சினிமா செய்திகள்
காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு இவ்வளவா? அடேங்கப்பா.. கடலுக்கு அடியில எடுத்த நாலு படத்துக்கு இம்புட்டு காசா!
தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் காஜல்அகர்வால். இவர் சூர்யா, விஜய், அஜித், கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றி பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.
மேலும் கடந்த 30 ஆம் தேதி காஜல் அகர்வாலுக்கும், தொழிலதிபரான கௌதம் கிட்சலு என்பவருக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது என்பது நாம் அறிந்ததே.
அதற்குப்பிறகு காஜல் அகர்வால் தன்னுடைய காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். அந்தப் புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் காஜல்.
இந்தநிலையில் காஜல் அகர்வால் தன்னுடைய காஸ்ட்லியான ஹனிமூனுக்காக செலவிட்ட தொகையைப் பற்றிய விபரம் இணையத்தில் தீயாய் பரவி, ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.
அதாவது காதல் கணவருடன் காஜல் அகர்வால் ஹனிமூனுக்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்தும் பல புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார்.
இவ்வாறு ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி, தன்னுடைய ஹனிமூனை ஜாலியாக என்ஜாய் செய்து வரும் காஜல், தன்னுடைய ஹனிமூனுக்காக எவ்வளவு செலவு செய்து உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்த ஹனிமூனுக்காக ரூபாய் 40 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதைக் கேட்ட ரசிகர்கள் பலர் ஆச்சரியப்பட்டதோடு, ‘ஹனிமூனுக்கு இவ்வளவா’ என்று ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
