Connect with us

Cinemapettai

தமிழ் சினிமாவில் அந்த நடிகர் தான் என்னோட கிரஷ்.. குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய காஜல் அகர்வால்

kajal-agerwal-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் அந்த நடிகர் தான் என்னோட கிரஷ்.. குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய காஜல் அகர்வால்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு பிரபல தமிழ் நடிகர் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சுமாரான படங்கள் நடித்தாலும் அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் தான் காஜல் அகர்வால். தமிழுக்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையானார்.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் வெளியான துப்பாக்கி திரைப்படம் தமிழில் காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

தளபதி விஜய்யுடன் மட்டுமே துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் நடித்தார். தற்போது விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்திற்கு காஜல் அகர்வால் ஒப்பந்தமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கிய வெப்சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால். ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற பெயரில் உருவாகியிருந்த அந்த வெப்சீரீஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திருமணத்திற்கு பிறகு செம கிளாமராக நடித்துள்ளார் காஜல் அகர்வால். அந்த வெப்சீரிஸ் பற்றிய நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் எந்த நடிகர் மேல் உங்களுக்கு க்ரஷ்? என கேள்வி கேட்டனர். அதற்கு தளபதி விஜய் என கூறினார் காஜல் அகர்வால். முன்னதாக அஜித் மற்றும் விஜய் என கூறிய நிலையில் யாராவது ஒருவர் தான் சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு யோசிக்காமல் விஜய் என்றார் காஜல் அகர்வால்.

vijay-kajalagerwal-cinemapettai

vijay-kajalagerwal-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top