நம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல காலமாக போட்டியும், பொறாமையும் இருந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சில வருடங்களாக ஆரோக்யமான போட்டி தான் உள்ளது என்றால் அது மிகையாகாது. அஜித் – விஜய், தொடங்கி பல டாப் ஹீரோக்கள் இன்று நெருங்கிய நண்பர்கள் தான். மல்டி ஸ்டார்கள் நடிக்கும் படங்களும் பெருகிவிட்டது. அவ்வளவு ஏன் ஒரு தயாரிப்பாளர் மற்றவருக்ககாக தன் பட ரிலீஸ் தள்ளிவைக்கும் அளவிற்கு கோலிவுட் வளர்ந்துள்ளது.

அமலா பால்

ஹீரோயின்களும் ஒருவருக்கொருவர் நல்ல நட்புடன் தான் உள்ளனர். தன் விவாகரத்துக்கு பின் கம் – பேக் ஆன அமலாபால் ஏகத்துக்கு பிஸி. அரவிந்த் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்க்கல், விஷ்ணு விஷாலின் ராட்சஷன் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

காஜல் அகர்வால்

amala paul

இந்நிலையில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை காஜல் அகர்வால் தன் ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின ஸ்பெஷல் ஆக வெளியிட்டார். இந்த போஸ்டரை பார்க்கும் பொழுது இது அதிரடி ஆக்ஷன் படம் என்று தெரிகிறது.

amala paul flp

சினிமா பேட்டை கொசுறு நியூஸ்

சில நாட்களாகவே கார் வரி ஏய்ப்பு வழக்கு, தொழிலதிபர் ஒருவரால் பாலியல் தொல்லை என்று சங்கடத்தில் சிக்கி தவித்தார் அமலா பால். அதிலிருந்து மீண்ட இவர் கடந்த வாரம் பாண்டிச்சேரியில் பிரபல கண் ஹாஸ்பிடலை திறந்து வைத்தார்.

amala paul

மேலும் தனது கண்களை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்தியுள்ளார்.