kajal-agarwal-pretty-sareeகவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படமும், அவர் ஏற்கனவே நடித்து முடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  சிம்புவிடம் அடுத்தடுத்து சிக்கி தவிக்கப்போகும் நான்கு இயக்குனர்கள்?

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதையடுத்து ‘வாலு’ இயக்குனர் விஜய்சந்தர் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் சிம்பு நடிக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிப்பார் என தெரிகிறது. பீப் பாடல் விவகாரத்தால் சிம்புவின் சினிமா வாய்ப்புகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதை அடுத்தடுத்து வரும் சிம்புவின் படங்கள் குறித்த செய்திகள் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.