வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி
மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரியா பார்டரில் உள்ள கேரன்தியா பகுதியில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளதாம்.

இதுபோக நடிகை காஜல் அகர்வால் சில புகைப்படங்களை டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் கடுப்பான இயக்குனர் சிவா, காஜலை நேரில் அழைத்து செம டோஸ் விட்டாராம். இதன்பிறகு உடனடியாக தான் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை நீக்கியுள்ளார் காஜல்.