கோலிவுட்டில் ‘போகன்’ நல்ல வரவேற்பை பெற்றது தெலுங்கில் அரவிந்த் சாமி கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்இதில் ஹீரோயினாக நடிக்க முதலில் கேத்ரின் திரசா ஒப்பந்தமானார்.

கோலிவுட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘போகன்’. லக்ஷ்மன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

catherine-tresa

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்ஷிகா டூயட் பாடி ஆடியிருந்தார். மிரட்டலான வில்லன் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். இதன் தெலுங்கு ரீமேக்கையும் லக்ஷ்மனே இயக்கவுள்ளாராம்.

தெலுங்கு ஆடியன்ஸுக்கு ஏற்ப திரைக்கதையில் மட்டும் சில மாறுதல்கள் செய்துள்ளனராம். இதில் ஹீரோவாக ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கவுள்ளார்.

Catherine Tresa

அரவிந்த் சாமி நடித்த ஆதித்யா கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முதலில் ஹீரோயினாக நடிக்க கேத்ரின் திரசா ஒப்பந்தமானார்.

kajal-agarwal

தற்போது, திடீரென சில காரணங்களால் கேத்ரின் திரசாவிற்கு பதிலாக காஜல் அகர்வாலை படக்குழு கமிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். ஷூட்டிங்கை வருகிற நவம்பர் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.