Connect with us

Cinemapettai

கணவருடன் சேர்ந்து புதிய பிசினஸ் தொடங்கிய காஜல் அகர்வால்.. முதல்ல நகை கடை, இப்ப இதுவா!

kajal-agerwal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கணவருடன் சேர்ந்து புதிய பிசினஸ் தொடங்கிய காஜல் அகர்வால்.. முதல்ல நகை கடை, இப்ப இதுவா!

நடிகைகள் பெரும்பாலும் தங்களுடைய சம்பளப் பணத்தை ரியல் எஸ்டேட், நகைக்கடை போன்ற தொழில்களில் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கணவருடன் புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார்.

நடிகைகள் பெரும்பாலும் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பணமும் பணமும் சேருவது தானே நியாயம். அதனை புதிய புதிய தொழில்களில் முதலீடு செய்வார்கள்.

முன்னதாக நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய சகோதரி ஒருவருடன் சேர்ந்து தற்போது மும்பையில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நீண்டகால நண்பரான கௌதம் கிச்சுலு என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அவருடன் சேர்ந்து புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளாராம். வீடு, ஆபீஸ் போன்றவற்றிற்கு உள் அலங்காரம் செய்தல் மற்றும் அலங்காரத்திற்கு தேவையான பொருள்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யும் நிறுவனம் தான் அது.

இதற்காக தனது கணவருடன் சேர்ந்து சமீபத்தில் ஒரு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். மேலும் இருவரும் சேர்ந்து தொழிலுக்காக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது.

kajal-husband-cinemapettai

kajal-husband-cinemapettai

காஜல் அகர்வால் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top