Connect with us

Cinemapettai

புது பிசினஸில் பட்டைய கிளப்பும் காஜல் அகர்வால்! வேற லெவல் தான் போங்க!

kajal-agarwal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புது பிசினஸில் பட்டைய கிளப்பும் காஜல் அகர்வால்! வேற லெவல் தான் போங்க!

கோலிவுட்டில் ‘பழனி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இதனைத் தொடர்ந்து காஜல், பல முன்னணி  ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அதுமட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி நடிகை காஜல் அகர்வாலுக்கும், கௌதம் கிட்சலு என்ற தொழில் அதிபருக்கும் திருமணம் நடைபெற்றது. மேலும் காஜல் திருமணத்திற்கு பிறகும் தனது கேரியரை நிறுத்த போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

தற்போது நடிகை காஜல் அவரது கணவருடன் இணைந்து, புதிய தொழில் ஒன்றை தொடங்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்று திரும்பிய காஜல் ‘இந்தியன்-2’, ‘ஆச்சார்யா’, ‘கோஸ்டி’ போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அதேபோல், திருமணத்திற்குப் பிறகு காஜல் தொழிலதிபராகவும் அவதாரம் எடுத்துள்ளாராம். அந்தவகையில் நடிகை காஜல்  வீட்டை அலங்கரிக்கும் பொருட்களை விற்பனை செய்வது, வீட்டை அலங்கரித்து தருவது போன்ற புதிய தொழிலை தனது கணவருடன் சேர்ந்து ஆரம்பித்துள்ளாராம்.

kajal-agerwal-cinemapettai

kajal-agerwal-cinemapettai

மேலும் காஜல் ஆன்லைன் மூலம் நடத்திவரும் இந்த வியாபாரத்திற்கு தனது சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்தி வருகிறார்.

அது எவ்வாறென்றால், இந்த பிஸினஸ் விளம்பரத்திற்காக காஜல் தனது கணவருடன் இணைந்து நடித்தும் உள்ளாராம். அந்த விளம்பரங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறார் காஜல்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top