fbpx
Connect with us

Cinemapettai

எப்பா ராசா நீ கொஞ்சம் தள்ளியே இரு.. வாரிசு நடிகரை கண்டாலே ஓட்டம் பிடிக்கும் காஜல் அகர்வால்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எப்பா ராசா நீ கொஞ்சம் தள்ளியே இரு.. வாரிசு நடிகரை கண்டாலே ஓட்டம் பிடிக்கும் காஜல் அகர்வால்

வடமாநிலத்தில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்கள் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறது.

தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி 2 படத்தின் இயக்குனர் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி படம் ஒன்றில் நடிக்க வைக்க உள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.

ஆனால் காஜல் அகர்வால் சமீபகாலமாக அனைத்து நடிகர்களின் படங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பதால் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டதை பார்க்க முடிந்தது.

மார்க்கெட் இல்லாத ஜீவா கூட ஜோடி போட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் படத்தில் மட்டும் ஆரம்பத்திலிருந்தே நடிக்காமல் தவிர்த்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் நயன்தாரா நடிப்பில் உருவான நண்பேன்டா படத்தில் முதன் முதலில் ஜோடியாக நடிக்க கேட்டது காஜல் அகர்வால் தானாம். காஜல் அகர்வால் அந்த வாய்ப்பை நிராகரிக்க அதன்பிறகுதான் நயன்தாரா ஜோடி போட்டார்.

தற்போது உதயநிதி நடிக்கும் புதிய படமொன்றில் காஜல் அகர்வாலை நடிக்க வைக்க படக்குழுவினர் பேசியுள்ளனர். ஆனால் மீண்டும் உதயநிதி படத்தின் வாய்ப்பை காஜல் நிராகரித்து விட்டதால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நடிகரின் படத்தை இரண்டு முறை நிராகரித்ததற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என துப்பு துலங்க ஆரம்பித்திருக்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top