Tamil Cinema News | சினிமா செய்திகள்
வயசு ஏற ஏற கூடிக்கொண்டே போகும் மவுசு.. காஜலுக்குத்தான்!
நடிகை காஜல் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்றைக்கும் காஜல் முன்னணி நடிகையாக தமிழ் தெலுங்கில் ஜொலிக்கிறார்.
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் டாப் நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துவிட்ட காஜல் கொஞ்ச நாளாக கோலிவுட் பக்கம் காணவில்லை. ஒருவேளை அவ்வளவு தானா என்று கோலிவுட் முணுமுணுத்தபோது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
அவரிடம் கைவசம் பாரிஸ் பாரிஸ் என்ற ஒரு படமே அதற்கு முன்பு இருந்தது. இப்போது தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் மொசாகல்லு படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் இந்தியில் ஜான் ஆப்ரகாமின் மும்பை சாகா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படி கைவசம் நான்கு புராஜக்ட்களை வைத்துள்ளார்.
மும்பை சாகா படத்திலும் ஜனவரி 20ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப்போகும் காஜல் அதன்பிறகு இந்தியன் 2 படப்பில் வரும் ஜனவரி 28ம் தேதி பங்கேற்க உள்ளாராம்.
