Connect with us
Cinemapettai

Cinemapettai

kajal-agarwal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கணவரை மூச்சு முட்ட இறுக்கி அணைத்து போஸ் கொடுத்த காஜல் அகர்வால்.. கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலு(Kajal Aggarwal)க்கு பிரபல தமிழ் நடிகர் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சுமாரான படங்கள் நடித்தாலும் அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் தான் காஜல் அகர்வால். தமிழுக்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையானார்.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் வெளியான துப்பாக்கி திரைப்படம் தமிழில் காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

தளபதி விஜய்யுடன் மட்டுமே துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் நடித்தார். தற்போது விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்திற்கு காஜல் அகர்வால் ஒப்பந்தமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கிய வெப்சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால். ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற பெயரில் உருவாகியிருந்த அந்த வெப்சீரீஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திருமணமானால் என்ன, நான் கவர்ச்சி காட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை போல அந்த வெப்சீரிஸில் காட்டு காட்டு என கிளாமர் காட்டியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவரை இறுக்கி அணைத்தபடி காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

kajal-agarwal-husband-photo

kajal-agarwal-husband-photo

Continue Reading
To Top