Tamil Cinema News | சினிமா செய்திகள்
காஜல் அகர்வால் அதிகமான பேசுற ‘அந்த’ தமிழ் வார்த்தை.. ஆக்ஸ்போர்டு டிக்சனரியில்!
காஜல் அகர்வால் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு தமிழ் வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்சனரியில் சேர்க்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையான காஜல் அகர்வால், தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
10 வருடங்களுக்கு மேல் தமிழில் நடித்திருந்தாலும் இதுவரை காஜல் அகர்வாலுக்கு தமிழில் சரளமாக பேச தெரியாது. எனினும் தமிழில் பேசுவதை புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் பதில் அளித்துவிடுவார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் அய்யோ என்ற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் சேர்க்கப்பட்டுள்ள பதிவினை வெளியிட்டுள்ளார். அதற்கு மேல் நான் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்த ஆக்ஸ்போர்டு டிக்சனரியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அய்யோ என்ற வார்த்தைக்கு, மனிதர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை என்று ஆக்ஸ்போர்டு குறிப்பிட்டுள்ளது. மகிழ்ச்சி, வலி, பயம், சோகம், ஆச்சர்யம், துக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த அய்யோ என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

oxford
