Connect with us
boomerang-movie

2.5 ரூபாய் கோடி நஷ்ட ஈடு கேட்ட காஜல் அகர்வாலுக்கு நோஸ்கட் கொடுத்த நீதிமன்றம்

News | செய்திகள்

2.5 ரூபாய் கோடி நஷ்ட ஈடு கேட்ட காஜல் அகர்வாலுக்கு நோஸ்கட் கொடுத்த நீதிமன்றம்

2.5 ரூபாய் கோடி நஷ்ட ஈடு கேட்ட காஜல் அகர்வாலுக்கு நோஸ்கட் கொடுத்த நீதிமன்றம்

எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Kajal-Agarwal

Kajal-Agarwal

பஞ்சாபைச் சேர்ந்த நடிகை காஜல் அகர்வால், பாலிவுட்டில் ஹோ கயா நாவில் என்ற இந்தி படம் மூலம் 2004ம் ஆண்டு அறிமுகமானார். பின்னர், 2007ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து, பழனி படத்தின் மூலம் தமிழிலும் கால் பதித்தார். ஆனால், இவற்றில் எந்த படமும் காஜலை நடிகையாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. 2009ஆம் ஆண்டு இவர் ராம் சரணுடன் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தை ராஜமௌலி இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து, காஜலுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் காஜல் சமீபத்தில் மெர்சல் படத்தில் விஜயுடனும், விவேகம் படத்தில் அஜித்துடனும் ஜோடி போட்டு இருந்தார். தற்போது இந்தி திரையுலகில் ஹாட் ஹிட் அடித்த `குயின்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். பாரிஸ் பாரிஸ் எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். நடிகையாக கேரியரைத் தொடங்கிய 2008ம் ஆண்டு வாக்கில் எண்ணெய் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தை இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என இருதரப்பு இடையே ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த எண்ணெய் நிறுவனம் காஜல் நடித்த விளம்பரத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு மேலும் ஒளிபரப்பியதாக காஜல் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

kajal

kajal

புகாரைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக நடிகை காஜல் அகர்வால் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஒப்பந்தத்தை மீறி விளம்பரப் படத்தை ஒளிபரப்பியதால், தனக்கு ரூ.2.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி காஜல் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தனி நீதிபதி, இழப்பீடு கோர உரிமை இல்லை என்று கூறி அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து காஜல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, டிஜிட்டலில் 60 ஆண்டுகளுக்கு உரிமை கொண்டாடலாம், மனுதாரர் இழப்பீடு கோருவது முறையற்றது என்று கூறி அந்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தனர். இதனால், அடுத்தகட்டமாக உச்சநீதிமன்றத்தை நாடுவதா அல்லது வழக்குத் தொடரும் எண்ணத்தைக் கைவிடுவதா என்பது குறித்து காஜல் தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top