Kajal Agarwal-Item-Song
Kajal Agarwal-Item-Song

நடிகை காஜல் அகர்வால் அஜித் தற்போது நடிக்கும் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டியில் பேசியதாவது :

சினிமாவிற்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. நிறைய ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். காதல் காட்சிகள், முத்தக் காட்சிகள் என இப்போதெல்லாம் படங்களில் சகஜமாகிவிட்டது.

ரசிகர்கள் தியேட்டரில் அதை சாதாரணமாக பார்க்கிறார்கள். ஆனால் ஷூட்டிங்கில் இயக்குனர், தயாரிப்பாளர்கள், லைட்மேன், கேமரா மேன், ரசிகர்கள் கூட்டம் என ஆயிரம் பேர் மத்தியில் குட்டை பாவாடை அணிந்து ஹீரோவிடம் நெருக்கமாக பிடித்து, முத்தக்காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் வெட்கமாக இருக்கிறது.

அப்படி நடிக்க எவ்வளவு கஷ்டம் என்பது நடிகைகளுக்கே தான் தெரியும். இனிமேல் ஹீரோயினுக்கு மெயின் சப்ஜக்ட் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என காஜல் கூறினார்.