தற்பொழுது தமிழ்நாட்டில் முக்கிய செய்தி என்றால் கஜா புயல்தான் இந்த புயல் தமிழகத்தையே புரட்டிப் போட்டுள்ளது அதுவும் முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் தான், விவசாயத்தையே நம்பியிருக்கும் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் அடியோடு அழித்து விட்டது.

kaja-puyal
kaja-puyal

டெல்டா மாவட்டங்களில் இருக்கும் மக்கள் வீடுகளை இழந்து, உண்ண உணவு, உடுத்த உடை என அனைத்தையும் இழந்து தவித்து வருகிறார்கள், யாராவது உதவி செய்ய மாட்டார்களா என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இயற்கையின் கோரத் தாண்டவத்தால் நடந்த இந்த சோகத்தை பற்றி அனைவரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிலர் இது இயற்கையாக நடந்தது அல்ல திட்டமிட்டு விவசாயத்தை அழிப்பதற்காக நடந்த சதி என பலர் கூறுகிறார்கள்.

அதிகம் படித்தவை:  இது அஜித்துடைய கதையல்ல - முருகதாஸ்

இந்த கஜா புயல் ஹார்ப் என்ற ஆயுதம் மூலம் செயற்கையாக நிகழ்த்தியுள்ளார்களாம். HAARP – High Frequency Active Auroral Research Program என்பது ஒரு அமெரிக்க இரகசிய ஆயுதமாகும், இதன் மூலம் தான் செயற்கையாக இந்த புயலை  உருவாக்கி உள்ளார்கள் இப்படி விவசாயத்தை அழித்து hydrocarbon திட்டத்தை செயல்படுத்த சில நாடுகள் முயற்சி செய்து வருகிறது என  கூறுகிறார்கள், இது உண்மையா இல்லை கட்டுக்கதையா என்று தெரியவில்லை.

இதைப் பார்த்த சில நெட்டிசன்கள் இந்த கதை செம்மையாக எழுதுகிறீர்கள் என்று கலாய்த்து வருகிறார்கள், இதேபோல் அஜித்தின் விவேகம் படத்தில் கூட சீக்ரெட் சொசைட்டி சேர்ந்த சிலர் செயற்கையாக பூகம்பத்தை ஏற்படுத்தி நாடுகளை அழிக்க முயற்சிப்பார்கள் அதை அஜித் தடுப்பார். இப்படி இயற்கையை கட்டுப்படுத்தும் கதை ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு ஹாலிவுட் படமான GeoStorm என்ற படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது