Tamil Cinema News | சினிமா செய்திகள்
கஜா புயலில் மக்களை நடுத்தெருவில் விட்ட கிரிக்கெட் வீரர்கள்… நடிகர்கள் மட்டும் தான் சம்பாதிக்கின்றனரா?
கஜா புயல் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களை சேதப்படுத்திவிட்டு சென்றது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் பலவிதமான தொண்டு நிறுவனங்களின் மூலம் உதவிகள் பெற்று வருகின்றனர். இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு கவர்மெண்ட் உதவிகள் செய்து மக்களை பாதுகாக்கும் மிக முக்கியமான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் என்ன பிரச்சினைகள் வந்தாலும் சினிமாத்துறையினர் மட்டும் உதவி செய்வது எப்படி வெளிப்படையாகப் பேசப்படுகிறது என்றால் அவர்கள் ஒரு செலிபிரிட்டி மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கை சூழ்நிலையை அறிந்து அவர்களுக்கு தேவையானதை களத்தில் இறங்கி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
எப்பொழுதுமே சினிமா கிசுகிசுவில் பேசப்படும் கஸ்தூரி இன்று மிகப்பெரிய உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை 12 லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்சூர் அலிகான் ஒருபடி மேலாக களத்தில் இறங்கி மக்களில் ஒருவராக உதவி செய்து வருகிறார் என்பது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

kasthuri-kaja

kasthuri-kaja-cyclone
விவசாயிகள் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் சொத்துக்களை இழந்து தனிமரமாக நிற்கின்றனர். இதில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார் அந்த விவசாயின் வீட்டிற்கு பாரதிராஜா, அமீர் போன்றவர்கள் சென்று அவர் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். மற்றும் தங்களால் முடிந்த காசோலைகளை அவர்களிடம் கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு உதவிகள் செய்து வரும் சினிமா துறையினரை நாம் கண்டிப்பாக பாராட்டி மகிழ வேண்டும். இவர்களுக்கு இணையாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் இதுவரை எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும் இந்திய அளவில் அவர்கள் கண்டு கொள்வதே இல்லையாம். ஆனால் தான் அணிந்திருக்கும் உடை முதல் தொப்பி வரை அனைத்துமே விளம்பரதாரர்கள் கொடுத்ததுதான்.
கோடி கோடியாக சம்பாதிக்கும் இந்த வீரர்களை நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் எந்த ஒரு உதவியும் செய்வதில்லை என்பது மிகப்பெரிய வருத்தமாக உள்ளது.கேப்டன் தோனி மட்டும் ஐ.பி.எல் மேட்சில் 30% தருவதாகக் கூறி உள்ளார் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இதில் முக்கியமாக ஒரு விஷயம் ஞாபகப்படுத்துகிறோம் என்னவென்றால் நடிகர் அமிதாப் உத்தரப் பிரதேச மக்களின் விவசாய கடனை தானே கட்டி அதனை முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுபோன்ற செலிபிரிட்டியாக வாழும் சினிமா துறையினர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே மக்களுக்காக ஒரு பங்களிப்பு இருக்க வேண்டும். இனியாவது அவர்கள் ஏதாவது உதவிகள் செய்யட்டும் மக்களின் மகிழ்ச்சியில் அவர்களின் பங்களிப்பும் இருக்கட்டும்.
