fbpx
Connect with us

Cinemapettai

கைதி திரைப்படம் எப்படி? கார்த்திக் கூறிய அந்த ஒத்த வார்த்தை.. பிகில்: ஒருவேளை பெருச செஞ்சுருவாங்கலோ!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கைதி திரைப்படம் எப்படி? கார்த்திக் கூறிய அந்த ஒத்த வார்த்தை.. பிகில்: ஒருவேளை பெருச செஞ்சுருவாங்கலோ!

தீபாவளிக்கு கைதி திரைப்படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது, இந்த படத்தில் தந்தை மற்றும் மகளுக்கான பாசத்தை மையப்படுத்தி ஒரே இரவில் நடைபெறும் நிகழ்வாக தெரிகிறது.

கைதி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் ரசிகர்களை நேரில் சந்திப்பில் கார்த்திக் கூறிய அந்த ஒத்த வார்த்தை தயாரிப்பாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது என்னவென்றால் “இறங்கி அடிச்சு ரொம்ப நாள் ஆச்சுல. 10 வருஷம் கழிச்சு இன்னொரு பருத்திவீரன் பாக்க போறீங்க” என்று அவர் கூறியது தானாம். இதனால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பருத்திவீரன் கிராமத்தை மையப்படுத்தி காதல், காமெடி, சண்டைக் காட்சிகள், வசனங்கள் என்று அனைத்திலும் கைதட்டி பாராட்டு வாங்கிய திரைப்படம் என்று கூறலாம். இது நடிகர் கார்த்தியின் முதல் படம் என்று கூற முடியாத அளவிற்கு மிக சிறப்பாக நடித்திருப்பார்.

இதுமட்டுமல்லாமல் இதே அக்டோபர் 25-ஆம் தேதி பிகில் திரைப்படம் இளைய தளபதி மற்றும் அட்லியின் இயக்கத்தில் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களுக்கும் போட்டி  கடுமையாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். கைதியை விட பிகில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளதால் அதிக லாபத்தையும் எடுக்க வேண்டும் என்பதில் உறுதி தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top