Tamil Cinema News | சினிமா செய்திகள்
நல்ல நாள் லாஜிக்.. கைதி டிரெய்லர் வெளியிடும் தேதி நேரம் அறிவிப்பு
கைதி டிரெய்லர் வரும் அக்டோபர் 7 ம் தேதி திங்கட்கிழமை ஆயுத பூஜை பண்டிகை அன்று இரவு 7 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் கைதி. டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கார்த்தி ஹீராவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அஞ்சாதே நரேன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன் திரில்லர் படமான கைதி தீபாவளி ரேஸில் குதித்து உள்ளது. விஜய்யின் பிகில், விஜய் சேதுபதியின் சங்க தமிழன் படங்களுடன் கைதியும் மோதுகிறது.
அண்மையில் டீசர் வெளியான நிலையில் தற்போது கைதி டிரெய்லர் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கைதி டிரெய்லர் வரும் அக்டோபர் 7 ம் தேதி திங்கட்கிழமை ஆயுத பூஜை பண்டிகை அன்று இரவு 7 மணி அளவில் வெளியாகிறது.
