Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலிவுட்டில் கைதி படத்தை வாங்க நடந்த அடிபுடி சண்டை.. கடைசியில் கார்த்தியாக நடிக்கப் போகும் பிரபல நடிகர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிநடை போட்ட கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் எடுக்கப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கைதி படம் எந்த ஒரு காதல் காட்சிகள் இல்லாமல் மிகவும் தத்துரூபமாக எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் உடன் மாஸ்டர் படத்தில் கைகோர்பதற்கு மிக பெரிய வாய்ப்பு கிடைத்தது.
கைதி படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் ஈட்டியது. இந்த பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்ததால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

kaithi
இதற்கு முன்னதாக சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல பாலிவுட் நடிகர்கள் கைதி படத்தை பார்த்துள்ளனர். இதில் நடிப்பதற்காக சில போட்டிகளும் இருந்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் அண்ணன் படத்தில் நடித்த அஜய்தேவ்கான் தற்போது தம்பி படத்தையும் ரீமேக் செய்வதற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
