கைதி ஹிந்தி ரீமேக் ஆன போலா டீசர்.. டில்லியை கண்முன் கொண்டு வர தவறினாரா அஜய் தேவ்கன்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 வெளியான கைதி படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. கார்த்தியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக கைதி படம் பார்க்கப்படுகிறது. இப்படம் கதாநாயகி, பாடல் ஆகியவை இல்லாமல் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.

தமிழில் இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி காரணமாக கைதி படம் ஹிந்தியில் போலா என ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை அஜய் தேவ்கனே இயக்கி, நடித்துள்ளார். மேலும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வருகின்ற மார்ச் 30ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

Also Read : லோகேஷ் யுனிவர்சில் மிரட்டப் போகும் அஜித்தின் AK-63.. ரோலக்ஸ் கெட்டப் எல்லாம் வெறும் சாம்பிள் தான்

இந்த படத்தில் தபு போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் போலா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது. அச்சு அசலாக தமிழில் கைதி படத்தில் உள்ள காட்சிகள் போலவே போலா படத்திலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் அப்பா, மகள் இடையே ஆன பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. போலா டீசரில் கைதி கார்த்தியின் டில்லி கதாபாத்திரத்தை கண் முன் கொண்டு வர அஜய் தேவ்கன் தவறிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : கைதி பட நடிகரை காதலிக்கும் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. தீயாய் பரவும் நெருக்கமான புகைப்படம்

ஆனாலும் பாலிவுட்டில் போலா படத்தின் ரிலீஸுக்காக தற்போது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தென்னிந்திய படங்களில் அஜய் தேவ்கனின் பத்தாவது ரீமேக் படம் தான் போலா. ஆகையால் தன்னுடைய கடின உழைப்பை போட்டு இந்த படத்தை மிகவும் சிறப்பாக எடுத்துள்ளார்.

Also Read : விக்ரம் பாக்கலன்னா தளபதி 67 கதை புரியாது.. அடுத்த குண்டை உருட்டிய கைதி ஆக்டர்