Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை அருகில் கைதி.. மாஸ் காட்டும் கார்த்தி

karthi-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை அருகில் கைதி.. மாஸ் காட்டும் கார்த்தி

இந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் வித்தியாசமான கதை அம்சம் கொண்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த இந்த படம் அவரை வசூல் மன்னனாக மாற்றியுள்ளது.

100 கோடி கடந்த படங்களின் வரிசையில் இணைந்துள்ள கைதி படம், இந்த வருடம் தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்தின் வசூலை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் அதை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா என அனைத்து ஏரியாவிலும் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. இந்த படத்தின் மூலம் உலக அளவு மார்க்கெட்டில் கார்த்தி இடம் பிடித்துள்ளார்.

முதலில் வெறும் சண்டை படம் என நினைத்துக்கொண்டிருந்த கைதி, படம் வெளியான பிறகு குடும்ப ரசிகர்களை கவர்ந்தது ஆச்சரியத்தில் ஒன்றாகும். மகளின் பாசத்திற்காக ஏங்கும் தந்தையின் நிலைமையை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார் லோகேஷ் கனகராஜ்.

தற்போது லோகேஷ் தளபதி விஜய்யை வைத்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top