கைதி 2 படத்தில் இந்த சீன் எல்லாம் கிடையாது.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் லோகேஷ் கனகராஜ்

கார்த்திக் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி. இப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஹிட்டடித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சினிமா மார்க்கெட் உயர்ந்தது என்று கூறலாம்.

மிக குறுகிய காலத்திலேயே லோகேஷ் கனகராஜ் சினிமாவில் கால் பதித்தது மட்டுமில்லாமல் விஜய்யை வைத்து படம் இயக்கி அதில் மிகப்பெரிய வெற்றி கண்டார். தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்கள் பட்டியலில் இவரும் இடம் பிடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் சினிமா வருவதற்கு காரணம் கமல்ஹாசனின் படங்கள்தான் எனவும் அவருடைய தீவிர ரசிகன் எனவும் பலமுறை கூறியுள்ளார். தற்போது தனது குருவை வைத்து சிஷ்யன் இயக்கும் விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.

kaithi-movie-goes-to-hindi
kaithi-movie-goes-to-hindi

இப்படி இருக்கும்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி இவர்கள் இருவரும் கைதியின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் ஒத்துழைத்தால் விரைவில் படம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார். தற்போது இதனால் கைதியின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் முதல் பாகத்தை போல ஆக்ஷன் காட்சிகளில் எதுவும் இடம்பெறாமல் சென்டிமென்ட் காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தி அப்பாவுக்கும் மகளுக்கும் நடக்கும் பாசப் போராட்டம் ஆகத்தான் இருக்கும் என கூறியுள்ளனர்.

இதனால் கைதி படம் முதல் பாகத்தைப் போல இல்லாமல் கொஞ்சம் வேறுபட்ட கதை அம்சங்களில் காணப்படும் எனவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -spot_img

Trending News