கார்த்தியின் சினிமா கேரியரில் கைதி படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கார்த்தியின் முதல் 100 கோடி வசூல் பெற்ற திரைப்படமாகும் கைதி திரைப்படம் அமைந்தது.
இந்த படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் சேர்ந்தார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் எனும் படத்தை எடுத்தார்.
பாடல்கள் இல்லாமல் ஒரு இரவில் நடக்கும் கதை என்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி 2 படம் உருவாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். கைதி படத்தை கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கைதி படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் இந்தப் படத்திற்கான கதை விவாதங்களை தொடங்கி விட்டதாகவும், அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் இப்போதே கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கண்டிப்பாக கைதி 2 படம் வெளியானால் கார்த்தியின் சினிமா வசூலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படமாகவும் அமையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.