fbpx
Connect with us

Cinemapettai

அரை நிர்வாணத்தில் வெளியிட்ட புகைப்படம்.. சர்ச்சையில் சிக்கிய தோனி பட நடிகை

dhoni-kaira

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரை நிர்வாணத்தில் வெளியிட்ட புகைப்படம்.. சர்ச்சையில் சிக்கிய தோனி பட நடிகை

பாலிவுட்டையே கலக்கி கொண்டு வரும் நடிகை கியாரா அத்வானி. தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எம். எஸ். தோனி தி அன் டோல்டு’ ஸ்டோரி படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

‘பரத் அனே நேனு’ என்ற பெரிய ஹிட் படத்தின் மூலம் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து பக்கத்து மாநிலமான ஆந்திர ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தெலுங்கில் சில படங்களில் தொடர்ந்து நடித்த கியாரா அத்வானி இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கில் ஷாத் கபூர் உடன் இணைந்து நடித்தார். இந்த படத்தை வரும் காதல் காட்சிகள் எவ்வளவு பிரசித்தம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதனால் இந்தியில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.

இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் தற்போது வெளியிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பை  கிளப்பியுள்ளது.

வெறும் இலையை வைத்து மார்பகத்தை மறைத்துக் கொண்ட அரை நிர்வாண புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த புகைப்படம் விளம்பரத்திற்காக எடுத்தாலும் ரசிகர்கள் மட்டும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top