Sports | விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியால் கைவிடப்பட்ட 20 ஓவர் போட்டியின் நட்சத்திர வீரர்.. வருத்தத்தில் முகம்மது கைஃப்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். ஐபிஎல் 2020-இல் டெல்லி அணியின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளர். கடந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடியவர்.
ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்ல. கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய அஸ்வின் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் ஒரு ஓவரில் 7.66 ரன்களை மட்டுமே சராசரியாக கொடுத்துள்ளார். அஸ்வின் பௌலிங் அல்லாது பேட்டிங்கிலும் கை கொடுக்கும் வீரர் என்பதால் அவரை நிச்சயமாக மூன்று விதமான போட்டிகளிலும் தேர்வு செய்திருக்க வேண்டும்.
இது இந்திய அணிக்கு ஒரு இழப்பு, அவரை போன்று ஒரு அனுபவமிக்க ஆட்டக்காரர் ஆஸ்திரேலியா தொடரில் வேண்டும் என்று முகமது கையிஃப் கூறியுள்ளார்.
இந்நிலையில் 2020 போட்டியில் மதிப்பு மிக்க சொத்து அஸ்வின், அவருக்கு அந்த வடிவத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் டெல்லி அணியின் தலைமை கோச் முகமது கையிஃப் தெரிவித்துள்ளார்.

Ashwin-CInemapettai
