Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடும் நோயினால் பாதிக்கப்பட்ட காதல் சந்தியா.. அடக்கடவுளே! இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது
2004 ஆம் ஆண்டு காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சந்தியா தமிழ்சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார். பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.
காதல், டிஷ்யூம், வல்லவன், தூண்டில், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் மற்றும் இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் நடித்த படம் சூதாட்டம்.
இவர் 2015ஆம் ஆண்டு சந்திரசேகரன் என்பவரை கேரளாவில் திருமணம் செய்து கொண்டார், பின்பு ஒரு வருடத்தில் குழந்தையும் பிறந்தது. சில வருடங்களாக போஸ்ட்பார்டம் ப்ளூஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு உள்ளான சந்தியா.
தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை அழுது கொண்டே இருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம். இந்த நோய் அதிகமான மன அழுத்தத்தினால் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டிருந்த சந்தியா, குடும்பத்தினர்களின் பெரும் ஆதரவால் தற்போது இந்த நோயிலிருந்து விடுபட்டு மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்பி உள்ளாராம்.
சந்தியா தற்போது இந்த நோயினை பற்றின விழிப்புணர்வை பெண்களிடம் கூறி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் பாதிக்கப்பட்டது போல் இனி எந்தப் பெண்களும் நோயினால் அவதிப் பட கூடாது என்ற சமூக அக்கறையில் இதை செய்து வருகிறாராம்.
