Connect with us
Cinemapettai

Cinemapettai

kadhal-sukumar-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காதல் பட நடிகர் சுகுமார் டைரக்ட் செஞ்ச 2 படம் பற்றி தெரியுமா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருக்கும் பலரும் இயக்குனர்களாக பல படங்களை இயக்கி உள்ளனர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அந்த வகையில் சிங்கம் புலி, ரவி மரியா போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அந்த வகையில் பரத் நடித்த காதல் படத்தில் காமெடியனாக நடித்த சுகுமாரும் ஒரு இயக்குனர் தான் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்தது. இவர் இதுவரை இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைக் குவித்த படங்களில் இதுவும் ஒன்று.

இந்த படத்தில் காமெடி நடிகர் சுகுமாரின் நடிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மதுரையைச் சேர்ந்த சுகுமார் காதல் படத்தை தவிர வேறு சில படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

ஆனால் காமெடி நடிகராக தான் நினைத்த இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் இயக்குனராக மாறி சும்மாவே ஆடுவோம், திருட்டு விசிடி போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

kadhal-sukumar-movies

kadhal-sukumar-movies

இந்த இரண்டு படங்களும் வெற்றிப் படங்கள் இல்லாததால் அவர் இயக்குனராக அறிமுகமானது பலருக்கும் தெரியாமலேயே போய்விட்டது. தமிழ் சினிமாவில் கவனிக்கத் தவறிய நடிகர்களில் இவரும் ஒருவர்.

Continue Reading
To Top