தந்தையுடன் துருவ் விக்ரம்.! பிரபல திரையரங்கத்தை தெறிக்க விட்ட ‘கடாரம் கொண்டான்’.! வைரலாகும் புகைப்படங்கள்

கமல்ஹாசனின் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் கடாரம் கொண்டான். இதை காண்பதற்காக தனது தந்தையுடன் காசி தியேட்டருக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வந்துள்ளார் துருவ் விக்ரம்.

இந்த படத்தில் முதல் பாதி விறுவிறுப்பாக இருப்பதாகவும் விக்ரமின் நடிப்பு மிக சிறப்பாக வந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் பின்னணி இசை மிக பிரம்மாண்டமாக வந்துள்ளதாகவும், விக்ரமின் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை ஒரே நாட்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி  எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில திரையரங்குகளில் நான்கு காட்சிகளை மேலே வெளியிடுகின்றனர்.

இந்தப் படத்துடன் சேர்ந்து  தி லயன், ஆடை போன்ற திரைப்படங்களும் வரிசைகட்டி இந்த வாரத்தில் வசூலை அள்ள காத்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் விக்ரமின் இந்த படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பதை காண்பதற்காக விக்ரமும், துருவ் விக்ரம் காசி தியேட்டரில்  ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

https://twitter.com/Vsp_Update/status/1152073636657811457

Leave a Comment