Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமல் படத்தில் விக்ரம் – கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
கடாரம் கொண்டான் படத்தின் ரிலீசை பற்றி படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பு அனைவருக்கும் பிடித்து வண்ணமாக உள்ளது. விக்ரம் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப நடிப்பையும் உடலையும் மாற்றங்கள் செய்து நடிப்பார். இவர் நடிப்பில் வெளியான ஐ, அன்னியன், சேது போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு புகழ் பெற்றுக் கொடுத்தன.

KADARAM KONDAN cheeyan vikram
நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இப்படத்தை கமலஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ட்ரெயின் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தை பற்றி படக்குழுவின் கிறிஸ்மஸ் தின விழாவையொட்டி வாழ்த்துக்கூறி பின்பு இப்படத்தை பற்றிய தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
Merry Christmas to all.! Second look poster & a special announcement with it, will be out on the New Year day.!Thanks to all Chiyaan’s for the patience & support..! #KadaramKondan @RKFI @tridentartsoffl #ChiyaanVikram @GhibranOfficial @aksharahaasan1 @kunal_rajan @GSrinivasReddy2
— RMS (@RajeshMSelva) December 25, 2018
விக்ரமுடன் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் மற்றும் நாசரின் மகன் அபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க ரவி நிவாஸ் ஆர் குதா ஒளிப்பதிவு செய்கிறார் வரும் ஏப்ரலில் 2019-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
