kadaram-kondam
kadaram-kondam

விக்ரம் 56 கடாரம் கொண்டான்

விக்ரம் 56

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் M.செல்வாதான் இயக்குகிறார். விக்ரமுடன் கமல்ஹாசன் பொண்ணு அக்‌ஷரா ஹாசன் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை. ஸ்ரீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.

cheeyan vikram kadaram kondan

இந்த தலைப்பையும், முதல் லுக் போஸ்டரையும் பார்த்த பலர் யார் இவர் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

Rajendra Chola

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் (வானதி) மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன் (கிபி.1012-1044) கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் கடாரம் கொண்டான் என்ற பட்டம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜேந்திர சோழனது போர் படையில் 12 லட்சம் வீரர்களில் இருந்து 14 லட்சம் வீரர்கள் இருந்தனர். இப்படை வீரர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள இந்திய ராணுவத்தின் எண்ணிக்கைக்கும், அமெரிக்க ராணுவதின் எண்ணிக்கைக்கு இணையானது.

Rajendra Chola

தரை வழியாக,தற்போதுள்ள கேரளம்,ஆந்திரா, ஒரிசா,பீகார்,மே
ற்கு வங்கம,தெற்கு கர்நாடகம்,வங்க தேசம் ஆகிய பெயர்களை கொண்ட பகுதிகளையும், கடல் வழியாக, இன்றைய இந்தோனேசியா,மலேசியா, காலடியில் வைத்து இருந்தான்.

இவரின் கடார படையெடுப்பின் கப்பல் படையை கற்பனை செய்து பாருங்கள் , எத்தனை எத்தனை ஆயிரம் மைல்கள் ,எத்தனை கப்பல்கள் ,எவ்வளவு மனித முயற்சி தேவை பட்டு இருக்கும், மனித இயந்திரங்கள், பாய் மரக் கப்பல்கெளை கொண்டு இத்தனை நாடுகளை வென்ற உலகின் முதற் பெரும் மன்னனாவான்.

………………………………………………………………………………………….

இத்தகைய பவர்புல் பெயரை வைத்துளார்கள் என்றால், படத்தின் வீரியம் என்ன வென்று பொறுத்திருந்து பார்ப்போம்.