Connect with us

எப்ப பார்த்தாலும் ‘அதுலயே’ மோகம்.. பலருடன் தொடர்பு.. மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

kadalur

Tamil Nadu | தமிழ் நாடு

எப்ப பார்த்தாலும் ‘அதுலயே’ மோகம்.. பலருடன் தொடர்பு.. மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டிக்டாக் மோகத்தால் திசை மாறிய மனைவியை கணவன் அடித்து கொலை செய்ததாக பரரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் குமரவேல்(26). இவரும் நெய்வேரி திடீர் குப்பத்தைச் சேரந்த ராஜேஸ்வரி (25) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். காடாம்புலியூரில் வசித்து வந்த இவர்கள் கடந்த 4 மாதத்திற்கு முன்பு பண்ருட்டி அன்வர்ஷா நகரில் வாடகை வீட்டில் குடியேறினார்கள்.

நேற்று முன்தினம் திடீரென ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக ராஜேஸ்வரியின் தாயார் போலீசார் புகார் அளித்தார். இதன்பின்னர் வழக்கு பதிவு செய்த பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

அப்போது கணவனே மனைவியை கொனற்து தெரியவந்தது. இதையடுத்து ராஜேஸ்வரியின் கணவர் குமரவேலை போலீசார் கைது செய்தனர். அப்போது குமரவேல் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ராஜேஸ்வரிக்கு அப்பகுதியில் உள்ள மெக்கானிக் ஒருவருடன் கள்ள தொடர்பு இருந்தது.

மேலும் டிக்டாக்கில் பாட்டு பாடியும் பல ஆண்களுடன் சேர்ந்து நடித்தும் காட்சிகளை பதிவிட்டார். இதனால் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை நான் கண்டித்து பார்த்தேன். ஆனால் ராஜேஸ்வரி கேட்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இரும்பு ராடால் ஓங்கி அடித்து கொலை செய்தேன் என்றார்.

ராஜேஸ்வரியின் டிக்டாக்கில் சுமார் 300க்கு மேற்பட்ட டிக்டாக் வீடியோக்கள் இருந்தது. அவரது கொலைக்கு டிக்டாக்கே காரணமாக அமைந்துவிட்டது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top