Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த வருடத்தில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட திரைப்படத்தின் மொத்த வசூல் நிலவரம்.!
பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் இந்த வருடம் பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் கடைக்குட்டி சிங்கம், இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, நாட்டின் மிக முக்கியமான ஒன்று விவசாயம் என்பதையும், சொந்தங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதையும் அழகாக திரைக்கதை மூலம் வெளிப்படுத்தினார்கள்.

karthi
இந்த வருடத்திலேயே அதிக மக்களால் ரசித்து பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது கடைக்குட்டி சிங்கம் தான் என அனைவருக்கும் தெரியும், மேலும் விநியோகஸ்தர்களுக்கு, லாபம் கொடுத்த திரைப்படம் என்றால் இந்த திரைப்படம் தான், குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக லாபம் ஈட்டிய திரைப்படம் இது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முழு வசூல் விவரம் தெரியவந்துள்ளது கடைக்குட்டி சிங்கம் உலகம் முழுவதும் 75 கோடி வரை வசூல் செய்துள்ளது, அதேபோல் தமிழகத்தில் 52 கோடி வரை வசூல் செய்திருக்கிறது இன்னும் சில இடங்களில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
