உலக அளவின் அசத்தி கொண்டிருக்கும் கபாலி- ரசிகர்கள் உற்சாகம்

பாகுபலி படத்தை தொடர்ந்து தற்போது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கபாலி. இப்படத்தின் டீசர் வெளியாகி உலக அளவில் சாதனை படைத்தது. மேலும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 12–ந் தேதி நடைபெற இருப்பதாகவும் .அடுத்த மாதமே படம் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.பல்வேறு மொழிகளில் ரிலீசாக இருக்கும் இப்படம் மலேஷியாவிலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான், ‘கபாலி’ படத்தின் ‘டி–சர்ட்’ அணிந்து போஸ் கொடுப்பது போன்ற படம் இணையத்தில் பரவ அதை தொடர்ந்து பல விதமான கபாலி ‘டி–சர்ட்’கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

இந்த ‘டி–சர்ட்’டுகள் ரூ. 350 முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. சென்னை, பெங்களூர், ஐதராபாத் நகரங்களில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ‘டி–சர்ட்டால் ‘ ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Comments

comments