fbpx
Connect with us

Cinemapettai

‘கபாலி’ டீசர் ரன்னிங் டைம் இதோ !

‘கபாலி’ டீசர் ரன்னிங் டைம் இதோ !

kabali-first-lookசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் டீசர் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளிவரவுள்ள நிலையில் இந்த டீசரின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீசர் 65 வினாடிகள் அதாவது ஒரு நிமிடம் ஐந்து வினாடிகள் ஓடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த 65 வினாடிகளில் ரஜினி பேசும் பஞ்ச் வசனம், ரஜினியின் கேரக்டர் ஆகியவை உள்ளதாக கூறப்படுகிறது.

‘கபாலி’ படத்தின் டீசர் எடிட்டிங் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் இன்று அல்லது நாளை இந்த டீசர் சென்சாருக்கு செல்லவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள ‘கபாலி’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top