fbpx
Connect with us

யூடியூபை மன்னிப்பு கேட்க வைத்த ‘கபாலி

News / செய்திகள்

யூடியூபை மன்னிப்பு கேட்க வைத்த ‘கபாலி

Kabali-Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் டீசருக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று படக்குழுவினர்களே எதிர்பார்க்கவில்லையாம். ரஜினி படம் என்றாலே மாஸ்தான் என்பது சந்தேகமில்லை என்றாலும் ‘லிங்கா’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையால் ரஜினியின் புகழ் குறைந்திருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஒரிரு நாட்களில் இந்த டீசர் ஒரு கோடிக்கும் மேல் பார்வையாளர்களும், 3L மேல் லைக்குகளையும் பெற்று ஆசிய அளவில் இந்த டீசர் சாதனை செய்துள்ளதாக யுடியூப் அறிவித்துள்ளது.

மேலும் மலேசியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது இந்த படம் உலக அளவில் விளம்பரமாகிவிட்டது. மேலும் ஜப்பானில் ரஜினிக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதால் டீசர் வெளியான மே 1ஆம் தேதி உலகில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர்களும் ஒரே நேரத்தில் யூடியூப் இணையதளத்தை ஓப்பன் செய்ததால் ஒருசில நிமிடங்கள் யூடியூப் இணையதளமே முடங்கியது.

இதனால் யூடியூப் இணையதளம் தங்களது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top