இதுவரை எந்த இந்தியப் படமும் ஒரு மாதத்தில் 2 கோடி பார்வைகளைப் பெற்றதில்லை. கபாலி டீசர் கடந்த மே 1-ம் தேதி யுட்யூப் இணையத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவால் வெளியிடப்பட்டது

பொதுவாக பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி பார்வைகளைப் பெற சில வாரங்கள் பிடிக்கும் மற்ற நடிகர்களின் பட டீசர்களுக்கு. ஆனால் மிக வேகமாக பத்து மில்லியனைக் கடந்த முதல் டீசர் கபாலிதான்.

அதேபோல யுட்யூபில் வெறும் 90 நிமிடங்களில் 1 லட்சம் விருப்பங்களைப் பெற்றதும் இந்த டீசர்தான்.

இப்போது டீசர் வெளியாகி 28 நாட்கள் ஆகிவிட்டன. இன்று 20 மில்லியன் அதாவது 2 கோடி பார்வைகளுக்கும் மேல் பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவில் இத்தனை பார்வைகள் பெற்ற ஒரே டீசர் கபாலிதான். சர்வதேச அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.