கபாலி டீசர் எப்போதும் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். ரஜினிகாந்த் பழைய ஸ்டைலில் மிரட்டுகிறார்.இந்த டீசர் லைக்ஸ் 1.2 லட்சத்தை தாண்ட ஹிட்ஸ் மட்டும் காட்டாமலேயே இருந்தது. ஏனெனில், பலரும் டீசரை பார்வையிடுவதால் சில மணி நேரம் கழித்து தான் அப்டேட் ஆகும் என கூறப்பட்டுள்ளது.தற்போது கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே தன் டுவிட்டர் பக்கத்தில் கபாலி 1 மணி நேரத்தில் 1 மில்லியன் ஹிட்ஸை எட்டியிருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் வேதாளம், தெறி என அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது.