கபாலி ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 42 நாட்களை உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முழுமையான கதை பற்றி நேற்று வரை வெளியாகாத நிலையில் தற்போது ஒரு கதை கசிந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க மக்களால் கறுப்பு சூரியன் என்று புகழாரம் சூட்டப்பட்டவர் சிறைக்குயில் நெல்சன் மண்டேலா. தனது கறுப்பின விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.
அதுபோல மலேசியா உலகளவில் உயர்ந்து நிற்பதற்கு அங்குள்ள தோட்டங்களில் வேலை பார்த்த தமிழர்களின் சலியாத உழைப்பு என்பது மறைக்க முடியாத உண்மை. அப்படி, கஷ்டப்பட்ட தமிழர்களை ஒரு தாதா கூட்டம் ஆட்டிப்படைக்கிறது.
ஆணவத்தை தட்டிக் கேட்கிற ‘கபாலி”யை சிறையில் அடைக்கிறது மலேசிய அரசு. அப்போதும் சிறையில் இருந்தபடியே தனது தோட்டத் தொழிலாளர்கள் விடுதலைக்காக போராடும் கதாபாத்திரத்தில்
நடித்துள்ளாராம் சூப்பர் ஸ்டார்.

அதிகம் படித்தவை:  ரஜினி சொன்னதால் 2.0 படத்தில் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன்