சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் கவுண்ட் டவுன் ஏற்கனவே தொடங்கிவிட்டது. உலகம் முழுவதும் வாழும் தமிழ் ரசிகர்களிடையே ‘கபாலி’ குறித்த செய்திதான் முக்கியத்துவமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் ‘கபாலி’ ஜூரம் தமிழர்களை மட்டுமின்றி மலாயா மக்களிடமும், மலேசிய அரசையும் பிடித்து ஆட்டுவித்து வருகிறது. மலேசிய அரசு ‘கபாலி’க்கு மரியாதை செய்யும் வகையில் புதிய ஸ்டாம்ப் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழ்ப்படம் ஒன்றிற்காக மலேசிய போஸ்டல் நிறுவனம் ஸ்டாம்ப் ஒன்றை வெளியிடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.