கபாலி படம் உலகெங்கும் 5000-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. உலகின் பல நாடுகளில் ஒரு நாள் முன்பாகவே படத்தின் பிரிமியர் காட்சி நடந்தது.

இந்த ஒரு காட்சி மூலம் மட்டுமே அமெரிக்கா மற்றும் கனடாவில் கபாலி ரூ 13 கோடியை வசூலித்துள்ளது. இதுவரை வேறு எந்தப் படமும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் இது பெரும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

இதுவரை வேறு எந்த இந்தியப் படமும் பிரிமியர் காட்சியில் இவ்வளவு தொகையைக் குவித்ததில்லை.