ரஜினி நடிப்பில் கடந்த ஜுலை 22-ந் தேதி வெளிவந்த ‘கபாலி’ பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்த இப்படம், வெளிவந்த பிறகும் சாதனைக்கு மேல் சாதனையை படைத்து வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இரண்டாம் பாகம் வரும் என்பதுபோல முடிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, படத்தை பலரும் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்ற கேள்வியோடு திரையரங்குகளில் இருந்து வெளியே வந்தனர். இந்த கேள்விக்கு ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பதிலளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘கபாலி’ படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்குக்கூட தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

தாணுவின் இந்த பதில், ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்பதை உறுதியோடு கூறினாலும், இதில் ரஜினி மீண்டும் நடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால், தற்போது ‘கபாலி’ படத்தை ஒருபக்கம் நல்ல விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபக்கம் கலவையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. இதனால், ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவிப்பாரா? என்று கோலிவுட் வட்டாரங்களில்

இருந்தாலும், ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால் அது ரஜினி ரசிகர்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சி தரும் செய்திதான்.