பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் வரும் 22ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் ரிலீசாகும் இப்படத்தை முதலில் எந்த நாட்டு ரசிகர்கள் பார்க்க இருக்கிறார்கள் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கபாலி படத்தின் உலகளவிலான முதல் காட்சி மலேசியாவில் நடைபெற உள்ளது என்று அயங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது. 21-ம் தேதி மலேசிய நேரம் இரவு 9 மணிக்கு (இந்திய நேரம் மாலை 6.30) கபாலியின் முதல் காட்சி நடைபெற உள்ளது.

அதிகம் படித்தவை:  பாகுபலி வசூலை முறியடிக்க முடியாமல் போன கபாலி

இதுதவிர கபாலி படத்தின் பிரீமியர் என்கிற சிறப்புக் காட்சி ஜூலை 21 அன்று பாரிஸில் உள்ள ரெக்ஸ் சினிமாஸில் இரவு 8.30 மணி அளவில் திரையிடப்படவுள்ளது. பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம் ஆகும். இங்கு ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கமுடியும்.

அதிகம் படித்தவை:  ரஜினி 2.0 திரைப்படம்.! ரிலீஸ் தள்ளிபோவதற்கு இது தான் காரணம்.!

இந்தத் திரையரங்கத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் கபாலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.