கபாலி படத்தை பார்த்தால் போதும் என்பது தான் பலரின் மனநிலை. இந்நிலையில் இப்படத்தில் வெளிநாட்டு ப்ரீமியர் புக்கிங் நேற்று தொடங்கியது.

தொடங்கிய அடுத்த நிமிடம் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் தான், இதுமட்டுமின்றி சென்னையில் பிரபல திரையரங்கில் முன்பதிவு தொடங்கிய அடுத்த நொடி அந்த தளமே முடங்கியது.

இந்நிலையில் கபாலி முன்பதிவில் மட்டும் ரூ 30 கோடியை தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது, மேலும் கண்டிப்பாக இரண்டாவது நாள் மாலைக்காட்சிக்குள் ரூ 100 கோடி வசூல் உறுதி எனவும் தெரிவித்துள்ளனர்.