ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக போவதாகவும் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில் ரஜினி பட ரீமேக்கில் அமிதாப்பச்சன் நடிப்பது இதுவே முதல்முறையாகும். ஆனால் இதற்குமுன்பு அமிதாப்பின் பல ரீமேக் படங்களில் ரஜினி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.