fbpx
Connect with us

Cinemapettai

கபாலி ரிலீஸ் தேதி மாற்றம்- வெளியான தகவல்

News | செய்திகள்

கபாலி ரிலீஸ் தேதி மாற்றம்- வெளியான தகவல்

kabali-rajinikanthபா ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. ஏராளமான புதிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. சமீபத்தில் ரஜினிகாந்த் இந்தப் படத்தின் டப்பிங்கில் பங்கேற்று பேசி முடித்தார்.

இதுவரை ஜூன் மாதம் இந்தப் படம் வெளியாகிவிடும் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது படம் வெளியாகும் தேதி மாறியுள்ளது.

ஒரு மாதம் தாமதமாகவே இந்தப் படம் வெளியாகும் என்று தெரிகிறது. கபாலி ரிலீஸ் குறித்து கலைப்புலி தாணு கூறுகையில், “படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்து சென்சாருக்கு அனுப்பவிருக்கிறோம். இந்த சென்சார் வேலை முடிந்த பிறகுதான் படம் வெளியாகும் தேதி நிச்சயமாகும்,” என்று தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம்தான் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் எந்தப் பெரிய புதிய படங்களும் வெளியாகாது. எனவே ஜூன் தொடங்கி, அடுத்த நாற்பது நாள் கழித்த பிறகுதான் பெரிய படங்கள் வெளியாகும்.

எனவே ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் கபாலி வெளியாகும் என்று திரைத் துறையினர் எதிர்ப்பார்க்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top