Kabali_Rajinikanthசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மெட்ராஸ் பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கபாலி. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ராதிகாஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி S.தாணு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை 1 ம் தேதி ரிலீஸாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி அந்த நேரத்தில் தேர்தல் பணிகள் தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்றுகொண்டிருக்கும் என்பதால் தேர்தல் முடிந்த பின்னரே கபாலி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன.