சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படத்தின் ஆடியோ வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், படம் வரும் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் வந்த தகவல்கள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படம் மலாய் மொழியில் டப் செய்யப்பட்டு மலேசியாவில் ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழ் ‘கபாலி’ ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘மலாய்’ கபாலி வரும் ஜூலை 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழில் ரிலீஸ் ஆன 5 நாட்கள் கழித்தே மலாய் மொழியில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டதாகவும் ஃபர்ஸ்ட் காப்பி தயாராகிவிட்டதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளது.