அண்மையில் வெளியான ரஜினியின் கபாலி பட பாடல்கள் யூடியூபில் பல சாதனைகளை செய்து வருகிறது.பாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து வெளிநாட்டு உரிமைகள் மற்றும் வெளிமாநில உரிமைகள் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழக ரிலீஸ் உரிமையின் வியாபாரமும் தொடங்கிவிட்டது.முதல்கட்டமாக இந்த படத்தின் மதுரை ரிலீஸ் உரிமையை பெற மிகப்பெரிய போட்டி இருந்த நிலையில் சாய் சினிமாஸ் நிறுவனம் ரூ.8.01 கோடிக்கு இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு தமிழ் படம் மதுரையில் இவ்வளவு தொகைக்கு விலைபோய்யிருப்பது இதுவே முதல்முறை.