தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஸ்டார் என்றால் அது நம்ம ரஜினி தான் இவருக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, ரஜினி தற்பொழுது காலா மற்றும் 2.௦ படத்தில் நடித்துள்ளார் இந்த இரண்டு திரைப்படங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

kabali
kabali

இந்த நிலையில் தற்பொழுது ரஜினி முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார், சமூகத்தில் நடக்கும் சில பிரச்னைக்கு குரல் கொடுத்து வருகிறார் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கபாலி,சினிமாவே அதிரும் அளவிற்கு அதிக ஒப்பனிங் வசூல் கொடுத்த திரைப்படம்.

இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது, மேலும் அமெரிக்காவில் மட்டும் 21 கோடி வசூல் சேர்த்தது கபாலி திரைப்படம், தற்பொழுது இந்த வசூலை முறியடித்துள்ளார் நடிகர் ராம்சரண்.

ஆம் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரங்கஸ்தலம் இந்த திரைப்படம் தான் கபாலி வசூலை முறியடித்துள்ளது இதுவரை அமெரிக்காவில் மட்டும் 21.5 கோடி வசூல் செய்து கபாலி வசூலை பின்னுக்கு தள்ளியது, இதனால் ராம்சரண் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.