சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கபாலி’ படத்தின் மூலம் திரையில் பார்க்க ரசிகர்கள் தவமிருந்து வருகின்றனர். முதல் நாள் முதல் காட்சியில் தலைவர் படத்தை பார்க்கவும், குறிப்பாக அவர் அறிமுகமாகும் காட்சியில் விண்ணை பிளக்கும் அளவுக்கு விசிலடிக்கவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை.

அதிகம் படித்தவை:  ஓவர்சீஸ் வியாபாரத்தில் ரஜினிக்கு பிறகு அஜித் ?

இந்நிலையில் ரஜினியின் அறிமுகக்காட்சி மட்டும் ஸ்லோமோஷனில் சுமார் ஒன்றரை நிமிடங்கள் வருவதாகவும், அறிமுகக்காட்சியே அதிரடி சண்டைக்காட்சி என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த ஒன்றைரை நிமிடங்களும் தியேட்டர் அதிரும் என்பது மட்டும் உறுதி. ரஜினி படத்தின் அறிமுகக்காட்சி பக்கா மாஸ் ஆக இருக்க வேண்டும் என்று வாரக்கணக்கில் ரஞ்சித் தனது உதவியாளர்களுடன் யோசித்து இந்த காட்சியை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.